சால்ட் பதிப்பகம் :
இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் பத்து புத்தகங்களுக்கு மேல் வாங்கினேன். இந்த ஆண்டின் முதல் வாசிப்பாக குமாரத்தி இருந்தது.இம்முறை சால்ட் பதிப்பகம் நிறைய புத்தகங்களை வெளியிட்டனர் ,அதில் குமாரத்தியும் ஒன்று. சால்ட் பதிப்பகம் என்றாலே எனக்கு ஒரு புரட்சியாளர்கள் போல் தோன்றும் .முதல் முறை அரங்குகள் கிடைக்காமல் ஒய்எம்சியே மைதான நடை பாதையில் புத்தகங்களை விற்றார்கள்.. சால்ட் பதிப்பகத்தின் நாவல்களும் , மொழி பெயர்ப்புகளும் , கவிதை தொகுப்புகளும் நன்றாக இருக்கும்.. அவர்களின் அட்டை வடிவமைப்புகென ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. நின்று புத்தகங்கள் பார்க்கும் சாக்கில் இரண்டு கவிதை தொகுப்புகளை முடித்திருக்கிறேன்.
குமாரத்தி:

இந்த நாவல் சில குமாரத்திகளையும், ஏசுவை போல் இருக்கும் திருடனையும் ,அவர்களை சுற்றியுருக்கும் மனிதர்களை பற்றிய கதை.. காணிக்கை மேரி சிஸ்டர் ,நிர்மலா சிஸ்டர் ,அமலி சிஸ்டர் எல்லாம் அன்பின் மறு உருவமாய் இருக்கிறார்கள். திருடன் கெம்புவை ஏசு என நினைக்கும் அமலி சிஸ்டர் … அமலி சிஸ்டருக்கு தன்னை பிடித்திருக்கிறதா ? இல்லை ஏசுவை பிடித்திருக்கிறதா ? என குழம்பும் கெம்புராஜ்..கருப்பசாமிக்கு படையல் போட சாமியாடிக்கு உதவி செய்யும் ஏசுவும் ,அமலி சிஸ்டரும் . அவர்கள் செய்யும் செயல்கள் ஒரு சில நிகழ்வுகளில் சிரிப்புடன் கடக்க வைக்கிறது. . கணவன் விட்டு போன பின்பு பல வருடங்கள் கழித்து திருமணம் செய்யும் மரியம் நட்சத்திரம்,கல்யாணம் முடிந்த பிறகு வரும் கணவன் சவரியான் ,வந்தது தந்தை என தெரிந்தும் ,தெரியாத மாதிரி நடிக்கும் பூவும் ,மலரும் …ஜார்ஜ் வாத்தியார், சலத்மேரி ,ஜோதி என பல மனிதர்கள் பற்றி இந்த நாவல் சொல்கிறது. முடிவில் கடைசி விருந்து முடித்து ஏசு கெம்புராஜ் தூக்கிலிடப்படுகிறான்.நிறைய முறை இது போல அவன் அமலியின் பார்வையில் உயிர்த்தெழுந்துள்ளான்..நானும் உயிர்த்தெழுவான் என நம்புகிறேன்
இதில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைப்பு இருக்கின்றது..அதன் வரை படங்களும் நன்றாக இருக்கின்றன.நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் இறந்து கீழே விழுந்தன இந்த பகுதியினை படிக்கும் போதெல்லாம் எனக்கு கண்ணீரே வந்து விட்டது.இந்த நாவல் முழுவதும் பறவைகளை காணலாம்.ஒருவேளை அனைத்து குமாரத்திகளும் பறவைகள் போல சுதந்திரமாக பறந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள் போலும்..எளிமையான நடையில் நரன் இந்த நாவலை எழுதியுள்ளார்..முதல் முறை வாசிப்பாளர்களுக்கும் இந்த நாவல் எளிமையானதாக இருக்கும் .
இந்த புத்தகம் வாங்க …

Leave a Reply